Tuesday, 1 March 2011

பிரித்தானிய செய்தி பிரிட்டனில் விற்கப்படும் சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரிட்டனின் சில இடங்களில் சட்ட விரோதமாக சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி விற்கப்பட்டு வருகின்றது.மிட்லேன் பிரதேச சந்தைகளில் புஷ்மீட் என்ற பெயரில் இது விற்கப்படுகின்றது. விஷேட வைபவங்களுக்கு விஷேட இறைச்சியை வாடிக்கையாளர்கள் கேட்கின்ற போது இவை வழங்கப்படுகின்றன.
வர்த்தக தரப்படுத்தலின் போது அதிகாரிகள் சில கடைகளைச் சுற்றி வளைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. முன்னர் எலி மாமிசம் விற்கப்பட்டமை அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் அதை விட இது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் அரியது. இது ஆப்பிரிக்கச் சந்தைகளில் கூட கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
4 கிலோ எடை கொண்ட ஒரு குரங்கை 85 பவுணுக்கு விற்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: