Wednesday, 23 February 2011

எம்.ஜி.ஆரின் மேக்கப்மேன் பீதாம்பரம் காலமானார்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை, பிப்.22  மறைந்த எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின்
மேக்கப் மேனும், பிரபல இயக்குநர் பி.வாசுவின் தந்தையுமான எம்.பீதாம்பரம் நேற்று (பிப்.21) மாலை 5 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

கேரளாவைச் சேர்ந்த பீதாம்பரம், வாகினி ஸ்டுடியோவில் உதவி மேக்கப்மேனாக தனது வாழ்க்கையை தொடங்கி, என்.டி.ராமாராவின் மேக்கப் மேனாக ஆனார். என்.டி.ஆரின் புகழ் பெற்ற கிருஷ்ணர் வேடத்தின் மேக்கப்பை போட்டவர் பீதாம்பரம்தான். மேலும் இந்தி நடிகர் அசோக்குமார், ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கும் மேக்கப் போட்டிருக்கிறார்.

நடிகர் எம்.ஜி.ஆருக்கு நிரந்தர மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார். இயக்குநர் பி.வாசு, அவரது இரண்டாவது மகனாவார்.

பீதாம்பரத்தின் உடல் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 comments: