Tuesday, 22 February 2011

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பையை சேர்ந்த 29 வயது சாந்தி என்ற வேலைக்கார பெண் ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பினார். மும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு அவள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.

அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்.

இவருக்கு “எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே “எய்ட்ஸ்” பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.

0 comments: