Saturday 12 February 2011

நெஞ்சில் கால் முளைத்த இந்திய சிறுவன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த உலகத்தில் விசித்திரங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றது, அதில் சில விசயங்கள் அதிசயம் மற்றும் நம்மை வியப்பில் கொண்டு செல்லக்கூடியதாக உள்ளன. மனிதனாக பிறக்கும் போதே ஒரு விசித்திரமான அங்க அமைப்பை கொண்டு பிறந்தவர்கள் பற்றி ஏராளமான செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8 வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது.
அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுகிறது. நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் அவனுக்கு பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.
இந்த சிறுவனின் இந் நிலையை சரி செய்வதற்கு முயன்ற போதிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது முடியாத செயலாகி விட்டது.
நாள் வருமானமாக வெறும் 200 ரூபாய் மட்டுமே பெறக்கூடிய என்னால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிய உடலை அகற்ற எவ்வாறு மருத்துவரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர் இந்தச் சிறுவனின் பெற்றோர்.


0 comments: