Sunday, 13 February 2011

நபிகள் நாயகம் பிறந்ததினம் - மதுபான கடைகளை மூட உத்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 நபிகள் நாயகம் பிறந்த தினமான பிப்.2ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் கிளப்புகளைச் சார்ந்த எப் எல் 2 பெர்மிட் ரூம்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஷோபனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 2003 விதி 12 மற்றும் மதுபானம் (உரிமை மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II (a) ஆகியவைகளின் கீழ் வருகின்ற 16.02.2011 அன்று நபிகள் நாயகம் பிறந்த நாளினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் கிளப்புகளில் உள்ள எப்.எல்.2 உரிமம் பெற்ற பெர்மிட் ரூம்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்கவேண்டும் என்வும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுயைமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: