Friday, 11 February 2011

பண உதவி கேட்டு பேஸ்புக் நிறுவனரை தொந்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர் பேர்க்கை தொடர்பு கொள்ள முயன்ற நபர்
பற்றிய செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே உள்ளன.

பிரதிப் மனுகொண்டா (31) என்ற அந்த இந்திய வம்சாவளி நபர் ஷூக்கர் பேர்க்கை பல முறை சந்திக்க முயன்றுள்ளார். அவரது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் அதற்கு பண உதவி செய்யச் சொல்லுவதுமே அவரது பிரதான கோரிக்கையாகும்.

இவர் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கத்தில் மெசேஜ்களை பதிவு செய்திருந்தார்.




அதன் பின்னர் அவரது வீட்டிற்கு பூங்கொத்துக்களுடன் கடிதமொன்றினையும் அனுப்பியிருந்தார்.




இவற்றிற்கு மேலதிகமாக பேஸ்புக் நிறுவன காரியாலத்திற்கும், ஷூக்கர் பேர்க்கின் வீட்டிற்கும் பல முறை சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் பலமுறை இவருக்கு எச்சரிக்கை செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஷூக்கர் பேர்க்கின் தங்கை ரண்டி மற்றும் காதலி ப்ரிஸ்ஸில்லா சான் ஆகியோரையும் சந்திக்க முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நபர் தொடர்பாக ஷூக்கர் பேர்க் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு அந்த நபரினால் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : விரைசெறி 

0 comments: