இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் என இந்திய ஊடகங்களில் செய்தியுள்ளாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி அதனைக் கண்டித்தும், இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் நாகை அவுரி திடலில் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். உண்ணாவிரத்தில் ம.தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment