Tuesday 8 February 2011

ஒரு வருடத்தில் யாழில் 54 பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 247 முறையற்ற கர்ப்பம் தரிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான புள்ளி விவரங்களை அவர் எமது செய்தியாளரிடம் வழங்கியிருக்கின்றார்.
நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து எமது செய்தியாளருக்குத் தெரிவித்த புள்ளி விவரங்களின் படி பின்வரும் இள வயதினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது :
இள வயதில்முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்தவர்களாக 247 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 14 பேர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர். 13 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யுத்தம் காரணமாக 959 பேர் பெற்றோரை இழந்துள்ளனர், 03 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 264 பேர் உள ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர். 288 பேர் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அவர், 227 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மற்றொரு சிரேஷ்ட அலுவலுர் "அண்மைக்காலமாக காலாசார சீரழிவு, மற்றும் சமூகச் சீரழிவுகளினால் இள வயதினர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதை இந்த அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது எனவும், இந் நிலையை மாற்றுவதற்கு சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments: