Saturday 19 February 2011

திமுக கூட்டணியில் பாமக

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது முக்கிய கட்சிகள்
இடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் நீடிக்கின்றன. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வும் தி.மு.க. அணியில் இடம் பெறும் என்று கடந்த சில தினங்களாக கூறப்பட்டது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 9 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள முதல் - அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் தனது பேரன் திருமண அழைப்பிதழை முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்து மண விழாவுக்கு வரும்படி அழைத்தார்.

இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதை டாக்டர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டில் இருந்து வெளியே வந்த போது நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பேரன் திருமண அழைப்பிதழை கொடுக்க மகிழ்ச்சியுடன் வந்தேன். தேர்தல் உடன்பாடும் முடிந்து விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளும், ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

கேள்வி:- கடந்த தேர்தலின் போதும் இதே அளவுதான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்:- இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி:- சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ஏற்கனவே டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசி விட்டார்.

கேள்வி:- இன்று கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்த்து வந்தீர்களா?

பதில்:- எதிர்பார்த்தும் வந்தேன்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விடலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளதே?

பதில்:- தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் அமோக வெற்றி பெறும்.

கேள்வி:- 45 தொகுதிகள் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று முன்பு கூறினீர்களே?

பதில்:- தேர்தலுக்கு முன்பு இதுபோன்று கூடுதல் தொகுதிகளை சொல்வது வழக்கம்தான்.

கேள்வி:-கடந்த தேர்தலிலும் இதே அளவு தொகுதிகள்தான் கிடைத்தன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் போட்டியிடுகிறீர்களே அது ஏன்?

பதில்:- நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

கேள்வி:- இந்த தேர்தலில் உங்கள் பிரசாரம் எப்படி இருக்கும்?

பதில்:- அது பின்னர் தெரிய வரும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

0 comments: