இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு
அரசு பஸ் வந்தது. இது சென்னை-சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னையில் இருந்து சேலம் சென்ற பின்பு அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சங்கராபுரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார்.
அரசு பஸ் வந்தது. இது சென்னை-சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னையில் இருந்து சேலம் சென்ற பின்பு அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சங்கராபுரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார்.
நேற்று மாலை வரை அந்த பேக்கை தேடி யாரும் பணி மனைக்கு வரவில்லை. சிறிது நேரத்தில் டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஊழியர்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் பணிமனைக்கு விரைந்து சென்று டிராவல் பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது.
அதன் கீழே சில துணிகளும், அதற்கு கீழே 1 1/2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையின் பிணமும் இருந்தது. இதைப் பார்த்ததும் போலீசாரும், பணிமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பிணத்தையும், பெண்ணின் தலையையும் போலீசார் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக இருந்த பெண்ணும் குழந்தையும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? டிராவல் பேக்குடன் பஸ்சில் ஏறியவர் எங்கு ஏறினார்? என்று பஸ் டிரைவர் மொட்டையன், கண்டக்டர் கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
டிராவல் பேக்குடன் பஸ்சில் ஏறியது யார்? அவர் எங்கு ஏறினார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அடையாளம் காண்பதற்காக பெண் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை வைத்து பிணமாக கிடந்த பெண் யார்? சமீபத்தில் யாராவது அந்த பகுதிகளில் குழந்தையுடன் மாயமாகி உள்ளார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறியதாவது:-
டிராவல் பேக்கில் பிணமாக இருந்த பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால் தான் மேல் கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் எனவே பெண், குழந்தையின் புகைப்படத்தை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப் படைகளை அமைத்துள்ளோம். அவர்களும் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். விரைவில் கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றிய உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்த பெண் சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் தலை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாலிதீன் கவரில் சைதாப்பேட்டை பஜார் தெருவில் உள்ள ஜவுளிக்கடையின் முகவரி உள்ளது. தனிப்படை போலீசார் அந்த கடைக்கு சென்று விசாரித்தனர். ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
சென்னையில் அந்த பஸ் நீண்ட நேரம் நின்ற பின்பு தான் சேலத்துக்கு புறப்பட்டுச்சென்றது. எனவே 2 பேரும் சென்னையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளி பயணி போல் வந்து பஸ்சில் பையை விட்டுச் சென்றுள்ளான்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தாய்-மகள் காணாமல் போனது குறித்து புகார் எதுவும் வந்துள்ளதா? என்றும் போலீசார் தகவல் சேகரித்து வருகிறார்கள். பேக்கில் பதிவாகி உள்ள கைரேகையை வைத்தும் விசாரித்து வருகிறார்கள்.
நன்றி : மாலைமலர்
நன்றி : மாலைமலர்
0 comments:
Post a Comment