Thursday, 20 January 2011

இந்திய உயர் அதிகாரியின் மனைவி தலைமறைவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் உயரதிகாரியின் மனைவி, தன் கணவர் தன்னை மிகவும் அச்சுறுத்தி வருகிறார் என்று கூறி, பதட்டத்தில் தற்போது தலைமறைவாகி உள்ளார். மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் வர்மா. இவர், பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பொருளாதாரத் துறை உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்திய ஹை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோருக்கு அடுத்தபடியாக இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது மனைவி பரோமிதா வர்மா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த ஆண்டு டிம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வர்மாவின் வீட்டை அழகிய கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அலங்கரித்திருந்தது. அந்நிலையில், டிசம்பர் மாதம் 11ம் தேதி  வர்மா அந்த கிறிஸ்துமஸ் மரத்தை பிடுங்கதி எறிய முயன்றார். அதை தடுக்க பரோமிதா முயன்ற போது, அவர் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார் வர்மா.
அதனால், பரோமிதாவின் மூக்கு உடைந்து, இரத்தம் வழிய ஆரம்பித்தது. இந்நிலையில், பரோமிதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். பரோமிதாவின் நிலை அறிந்த அண்டை வீட்டார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், போலீசிற்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். வர்மா உயரதிகாரி என்பதால், போலீசாரால் அவரிடம் அதிகளவில் விசாரணை நடத்த முடியவில்லை. அந்த கிறிஸ்துமஸ் மரம், வர்மா மனைவியின் உறவினர் ஒருவர் கொடுத்த அன்பளிப்பு என்பது தான் அவரின் கோபம்.
இதைத்தொடர்ந்து, வர்மா தனது பதவியை காரணமாக வைத்து, தன்னை போலீசாரால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பரோமிதா மற்றும் அவர்களின் குடும்பத்தையும் தான் ஒழித்துக் கட்டப்போவதாகவும் கூறி பரோமிதாவை மிரட்டியுள்ளார். பரோமிதாவை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் அவரை அச்சுறுத்தியுள்ளார்.
இதனால், பயந்து போன பரோமிதா, தனது ஐந்து வயது குழந்தையை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், பரோமிதா பிரிட்டன் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், தன் விரும்பத்திற்கு மாறாக, தன் கணவர் தன்னை இந்தியா அனுப்ப முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தான் பிரிட்டனிலேயே இருப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சகமும், இந்திய ஹை கமிஷனும் விசாரித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: