Sunday, 30 January 2011

வெற்றிகொண்டான் மறைவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக சொற்பொழிவாளர் இரா.வெற்றிகொண்டான் இன்று மறைவுற்றார். திராவிட இயக்கக் கொள்கைகளிலும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர் ஆகியோரின் மீதும் தீராப் பற்றும், உறுதியும் கொண்டிருந்தவர் அவர். ஜெயங்கொண்டத்தை சொந்த ஊராகக் கொண்ட வெற்றிகொண்டான், சென்னை சைதையில் வசித்துவந்தார். உடல்நலக்குறைவு காரணமாக ‌சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
திமுக தலைவர் கலைஞர் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது சொந்த ஊரான‌ ஜெயங்கொண்டத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு 30ம் தேதி இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.


0 comments: