Sunday, 30 January 2011

150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன்.
இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார்.
அவரது ஜோதிட நிலையத்தில் இருந்து, 15 ஆபாச சி.டி.களையும், உணர்ச்சிகளை தூண்டக்கூடிய பாடல் காசெட்டுகளையும் போலி எந்திர தகடுகள், வசிய மை போன்றவற்றையும், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக வைத்திருந்த போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாது:-
 
வி.டி.ஈஸ்வரன், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வயிற்று பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சித்த மருத்துவ நிலையம் தொடங்கி உள்ளார். பின்னர் தன்னை ஜோதிடர் என்ற சொல்லிக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்துள்ளார்.
 
குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சிலருக்கு சில விஷயங்கள் நடந்துள்ளது. உடனே அதை தனது சாதனை என்று துண்டு பிரசுரங்களாக அடித்து வினியோகித்து விளம்பரப்படுத்தி உள்ளார். அதை பார்த்து இவரிடம் குறி கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ரூ. 11 கட்டணத்தில் ஆரம்பித்து ரூ. 1000-ஆக உயர்த்தி உள்ளார்.
 
ஜோதிடம் பார்க்க வரும் பெண்களின் மனநிலையை அவர்களிடம் பேச்சு கொடுத்து அறிவார். அவர்கள் குடும்ப தாம்பத்யத்தில் திருப்தி இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் முதல் வேளையாக அவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்கு கூட்டிச் சென்று “சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்” என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார்.
 
இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார்.  ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார்.
 
யார் -யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார். தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
 
இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார்.  பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையை தூண்டுவார்.
 
யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையை தீர்த்து கொள்வார்
 
ஒரு சில பெண்களுக்கு அல்வாவில் கஞ்சா வைத்து கொடுத்து “செக்ஸ்” அடிமையாக வைத்துள்ளார். பொள்ளாச்சி ராணி, சேலம் குருவம்மாள், திருப்பூர் சவிதா உள்ளிட்ட 12 பெண்களை நிரந்தரமாக வைத்து செக்ஸ் அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments: