Sunday, 30 January 2011

குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பா.ஜ. ஆதரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பா.ஜனதா
ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் குற்றம்சாற்றியுள்ளார்.

டெல்லியில், இன்று நடைபெற்ற மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், சுவாமி அசிமானந்த் போன்றவர்களுக்கு குஜராத் அடைக்கலம் வழங்குகிறது என்றும் குற்றம்சாற்றினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை சங்கி தீவிரவாதம் என்றும் வர்ணித்த அவர், இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்படுவதாகவும் புகார் கூறினார்.

0 comments: