Thursday 27 January 2011

சேகர்பாபு எம்.எல்.ஏ. தி.மு.க.வில் சேருகிறார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தி.மு.க.வில் சேரப் போவதாக பரபரப்பு தகவல்
வெளியாகியுள்ளது.   அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு. இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி. மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழகத்திலேயே அதிகமான பொதுக்கூட்டங்கள் நடத்தியவர் இவர் என கட்சிக்காரர்கள் புகழ்ந்தனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் வாரந்தோறும் வடசென்னை கூட்டங்களில் பங்கேற்று பேசி வந்தனர்.தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தார். 2006 மாநகராட்சி தேர்தலில் தாக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட மன்றத்திலும் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்தார். இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சித் தலைமை சமீபத்தில் திடீரென நீக்கியது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு வட சென்னை மாவட்ட பொறுப்புகளில் இருந்த சேகர்பாபு ஆதரவு நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.   நிர்வாகிகள் மாற்றப்படுவதை எதிர்த்து வட சென்னை அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா வீட்டில் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து சேகர்பாபு தி.மு.க.வில் சேரப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. தி.மு.க.வில் முக்கிய தலைவருடன் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் அ.தி.மு.க. வின் வலுவான எம்.எல்.ஏ. வாக இருந்த அவர் கட்சியை விட்டு விலகுவது அ.தி.மு.க.வினரிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதுபற்றி சேகர்பாபு விடம் கேட்டபோது, நான் நம்பி இருந்த தலைமை என் மீது நம்பிக்கை இழந்து விட்டது. நான் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சிலர் என் கழுத்தை பிடித்து வெளியே தள்ள நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன் என்றார்.

0 comments: