இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆந்திர மருத்துவமனை சவக்கிடங்கில் 2 சிறுவர்கள் பிணத்தை பெருச்சாளிகள் தின்றதால் மருத்துவர்களை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் எல்கி செர்வு தன்டா பகுதியை சேர்ந்தவர்கள் வினோத் (13), துளசிராம் (14). இருவரும் அங்குள்ள நீம்மா ரெட்டி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார்கள். போலீசார் அவர்களது பிணத்தை மீட்டு மெகபூப்நகர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் 2 பிணங்களையும் பரிசோதனை செய்து விட்டு சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.ஊழியர்கள் 2 பிணங்களையும் குளிர்பதன பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்துவிட்டு சென்றனர்.
அப்போது பெருச்சாளிகள் சவக்கிடங்கில் புகுந்து 2 பிணங்களையும் தின்றன. அந்த சமயத்தில் உறவினர்கள் 2 பேரின் பிணத்தை வாங்க அங்கு வந்தனர். பெருச்சாளிகள் பிணங்களை தின்று கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ள ஊழியர்கள், டாக்டர்களை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். 2 சிறுவர்களின் பிணங்களை பெருச்சாளிகள் தின்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:
Post a Comment