Wednesday 26 January 2011

தமிழக காவல் அதிகாரிகள் 22 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குடியரசு தினத்தையட்டி, தமிழ்நாட்டில் சிறப்பான சேவை புரிந்த 22 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தினத்தையட்டி, சிறந்த சேவை புரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ள தமிழக போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

1. எஸ்.ஆர்.ஜாங்கிட் (கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.- சென்னை புறநகர் கமிஷனர்).

2. ஜே.கே. திரிபாதி (கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.- சிறைத்துறை இயக்குனர்).

3. எஸ்.எம்.முகமது இக் பால்(துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

4. பி.சி.லாலம் சங்கா (கடலோர பாதுகாப்பு கூடுதல் டைரக்டர்- சென்னை).

5. எஸ்.நிஜாமுதீன் (போலீஸ் சூப்பிரண்டு- திருச்சி மாவட்டம்).

6. பி.சுப்பிரமணியம் (சி.பி.சி.ஐ.டி திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, சென்னை).

7.எப்.எம்.ஹுசேன் (போலீஸ் சூப்பிரண்டு - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

8. எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10- வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).

9. எஸ்.சுப்பையா (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு- சிறப்பு புலனாய்வு பிரிவு- கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

10. ஆர்.மோகன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, தனிப்பிரிவு சி.ஐ.டி.- சென்னை).

11. பி.நாச்சிமுத்து (உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 14- வது பட்டாலியன், பழனி).

12.எஸ்.மரகதசுந்தரம் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கியூ பிரிவு சி.ஐ.டி., மதுரை).

13.கே.என்.முரளி (உதவி போலீஸ் கமிஷனர், துரைப்பாக்கம்- சென்னை). சி.பஞ்சாட்சரம்

14. கே.பெரியசாமி (துணை போலீஸ் சூப்பிரண்டு, பொருளாதார குற்ற தடுப்பு சி.ஐ.டி. பிரிவு, சேலம்).

15. ஆர்.ரங்கராஜன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்பு பிரிவு, தஞ்சாவூர்).

16. பி.பாலசுப்பிரமணியன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, தேனி).

17.ஆர்.கிருஷ்ணசாமி (துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு, வேலூர்).

18.சி.பஞ்சாட்சரம், (போலீஸ் இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

19. கே.சபரிநாதன் (போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், மத்திய புலனாய்வு பிரிவு, ஐ.ஜி.பி. என்போர்ஸ்மென்ட், சென்னை).

20.என்.ஆறுமுகம் (போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், ஆயுதபடை போலீஸ், சிவகங்கை மாவட்டம்).

21. ஏ.மோகன் (சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

22. கே.காதர்கான் (தலைமை போலீஸ்காரர், சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு).

சென்னையில் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சுந்தரவேல் முருகவேலுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி பதக்கம் பெறும் சிறைத்துறை அதிகாரிகள் வருமாறு:-

1. ஏ.நாராயணன் (உதவி ஜெயிலர், பெண்கள் துணை சிறைச்சாலை- சாத்தூர்).

2.எம்.முத்துக்குமார் (முதன்மை தலைமை வார்டர், துணை சிறைச்சாலை- துறையூர்).

3. கே.எழிலரசி (முதன்மை தலைமை வார்டர், பெண்கள் துணை சிறைச்சாலை- கடலூர்).

0 comments: