இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சாமியார் நித்யானந்தாவுடன், ரஞ்சிதா ஆபாசமாக இருந்த வீடியோ காட்சிகளினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சை கிளம்பியதில் இருந்து நடிகை ரஞ்சிதா வெளியுலகிற்கு தன் தலையை காட்டாமலேயே வாழ்ந்து வந்தார். தற்போது, மெதுமெதுவாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளார் ரஞ்சிதா. நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவில், தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து, சாமியிடம் இருந்து அருளாசியும் வாங்கினார் என்று சமீபத்தில் செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, நித்யானந்தாவுடன் அந்த சிடியில் இருக்கும் பெண், நான் அல்ல என்று மிகவும் கோபமாக சீறினார். மேலும், லெனின் தன்னை கற்பழிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ரஞ்சிதா ஆவேச பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு எதிராக மிகப்பெரிய சதி ஒன்று நடந்து வருவதாகவும், சிடியை வெளியிட்ட லெனின் ஒன்றும் தனி ஆள் இல்லை. அவருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கூட்டத்தினர் யார் என்று கேட்டதற்கு, தான் இன்னும் சிறிது காலம் வாழ விரும்புகிறேன் என்றும், தன் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றும் கூறினார். மேலும், என் உயிருக்கு முழு பாதுகாப்பு தருவதாக உத்தரவாதம் கொடுத்தால், நான் அவர்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன் என்றும் அவர் கூறினார்.
நான் கேட்டதற்காக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் போலீசை காவலுக்கு வைத்துவிட்டு, பின் அவர்கள் சென்றுவிட்டால், என் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும். அதன்பின், நான் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டிய நிலை வரும் என்று மிகவும் ஆவேசப் பேட்டி அளித்தார் ரஞ்சிதா.
மேலும், இறுதியாக ஒன்று மட்டும் கூறுகிறேன் என்று சொல்லிய ரஞ்சிதா, சிலப்பதிகாரம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் கெட்டவர்கள் அழிந்தது பெண்களால் தான். அன்றைய காலங்களில் கண்ணகி, திரௌபதி போன்றவர்களால் கெட்டவர்கள் அழிந்து போயினர். இன்று, "நான் வயிறு எரிஞ்சு சொல்லுகிறேன், என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் அனைவரும் சீக்கிரத்தில் அழிந்து போவார்கள்."
"என் வயிற்று எரிச்சல் அவர்களை சும்மா விடாது. அவரவர் செய்த பாவம் அவர்களை நிச்சயம் சேரும் என்றும் மிக ஆவேசமாக சாபம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது."
0 comments:
Post a Comment