Thursday, 13 January 2011

வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டப்பேரவைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர்கள் அதனைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
தமிழக சட்டசபையின் பதவிக் காலம் மே மாதம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து  சட்டசபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது.
மே மாதம் சட்டசபை தேர்தல்நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. எனவே சட்டசபை தேர்தலை நடத்த வசதியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது.தமிழகம் முழுவதும் 2011 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2010 அக்டோபர் 25ல் வெளி யிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட படிவங்கள் வழங்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க நவம்பர் 12ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் ஆகிய படிவங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வாக்காளர்களின் முழு விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது.þþதமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக வருவாய்த்துறையினர் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ளச் சென்றனர். இதனால் ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தாமதமானது. இந்த நிலையில் ஜனவரி 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். இதன்படி இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.

சென்னையைப் பொறுத்தவரையில் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான தா.கார்த்திகேயன், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

0 comments: