Sunday, 16 January 2011

பெட்ரோல் விலை உயர்வு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களி்ல் இது இரண்டாவது விலை உயர்வாகும்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரொல் விலையை மீண்டும் உயர்த்தின. நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ. 2.50 முதல் ரூ. 2.54 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விலையை ரூ.2.50ம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.54ம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.கடந்த டிசம்பரில் பெட்ரோல் விலை ரூ. 2.94 முதல் 2.96 வரை உயர்த்தப்பட்டது. இந் நிலையில் இப்போது மீண்டும் கடும் விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.

0 comments: