Wednesday 12 January 2011

தேர்தல் கூட்டணி பற்றி பொங்கலுக்கு பின் டாக்டர் ராமதாஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
 
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க.வின் கூட்டணி பற்றி பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்த கூட்டணி அறிவிப்பு, தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் அமையும். 16 வயதுதினருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
 
இளைஞர்கள் பொது வாழ்வில் ஈடுபடவேண்டியது தான். ஆனால் இந்த திட்டம் பள்ளி மாணவர்களை அரசியலுக்கு இழுத்து வந்துவிடும். எனவே வாக்களிக்கும் உரிமை 18 வயதினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் விதத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் திட்டமாக தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளது. இதனை செயல்படுத்துவதால் கிராமப்புற மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: