Tuesday 4 January 2011

தமிழகத்தில் வருடத்திற்கு 12ஆயிரம் பேர் சாவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சாலை விபத்துகளில் வேலூர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது வேதனையாக உள்ளது என்று மோட்டார் வாகன ஆய்வாளர் கூறினார்.   வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் நேற்று சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வாணியம்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் தலைமையில் நடைபெற்றது.   போக்குவரத்து துணை ஆய்வாளர் முத்துசெல்வன் முன்னிலை வகித்தார்.
 
அனைவரையும் துணை ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் பேசியதாவது:- தற்போது சாலை விபத்துகள் தொடர் கதையாக உள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்.  
 
தமிழகத்தில் மட்டும் 12ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். மேலும் கடந்த சில மாதங்களாக ஆம்பூர், வாணியம்பாடி வேலூர் போன்ற பகுதிகளில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது.
 
இதில் பெருமளவில் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு குறித்து கிராமப்புற மக்கள் மற்றும் நகர்புற மக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் வாகன ஒட்டிகள் குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்களுக்கு தகுந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
 
மேலும் சாலைகளில் விபத்து குறித்த அறிவிப்பு பலகைகள் அமைத்து வேலூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக அமைய பொமக்களுடன் சேர்ந்து உறுதி எடுத்து கொள்வோம் என்றார்.
 
வாணியம்பாடி ஆம்பூர், திருப்பத்தூர், ஆகிய பகுதிகளில் உள்ள டிரைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 108 ஆம்புலன்ஸ் முதலுதவி சிகிச்சை அலுவலர் அமுதா நன்றி கூறினார்.

0 comments: