Wednesday 1 December 2010

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்? பலிக்குமா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் விஜய் சென்னையில் நேற்று அவசரமாக ரசிகர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் ஏற்கனவே அரசியல் குறித்து கருத்து வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களிடமும் கருத்து கேட்டார். ரசிகர் மன்றத்தினர் ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சி துவங்க வேண்டும் என வற்புறுத்தினர். படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனைகள் கேட்டது நீடித்தது.

இதற்கிடையில் திடீரென்று டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். இதனால் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இளைஞர் காங்கிரசில் விஜய்க்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்றும் பேசப்பட்டது.

ஆனால் காங்கிரசில் சேருவது பற்றியோ அரசியல் கட்சி துவங்குவது பற்றியோ முடிவு எடுக்கவில்லை என்று விஜய் தெரிவித்தார். மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்து பேசியபோது அரசியலில் ஈடுபடுவது உறுதி என கூறினார்.

உடுமலைப்பேட்டையில் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோதும் அரசியல் பிரவேசம் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் அரசியலில் ஈடுபட இதுதான் சரியான நேரம் என்றும், பொங்கல் பண்டிகைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் வடபழனியில் உள்ள ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்ததாகவும், விஜய்கவன முடன் அவற்றை கேட்ட தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரகேரன் கலந்து கொண்டார்.

0 comments: