Sunday 5 December 2010

விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் கற்பழிப்பு`

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் காட்டுத்தனமாக கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இந்த மனிதாபிமானமற்ற கோரச் சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தை பிரிட்டன் அலைவரிசை 4 வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த காட்சி இன்னும் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை.
அந்த வீடியோ காட்சியைப் பார்க்க நெஞ்சில் திடமில்லை என்று அந்த தொலைக்காட்சி பணியாளர்கள் பதைபதைப்புடன் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு மிருகத்தனமாக சிங்கள ராணுவம் நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது
இதனால் ஐரோப்பிய நாடுகளில் கொந்தளிப்பு உருவாகி இருக்கிறது. இது மாதிரி காட்டுமிராண்டித்தனமான செயல்களை உலகக் கொடுங்கோலர்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற தலைவர்களே செய்ததில்லை என்று மனிதாபிமான சிந்தனை கொண்டவர்கள் மனம் கொதித்து கூறுகிறார்கள்.
உலக நாடுகளில் வாழுகின்ற மக்கள் இப்படிப்பட்ட கொடூரத்தைக் கண்டு கொதித்து போய் இருக்கின்ற நேரத்தில் தொப்புள் கொடி உறவுகள் என்றும் தாய்த்தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழக மக்கள் இதை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கே அவசியமில்லை என்று நினைக்கும் வண்ணம் இருக்கிறது தமிழ்நாட்டு மக்களின் மனப்போக்கு என சமூகப் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
"உலகத்தின் எந்த மூலையிலும் தமிழன் தாக்கப்பட்டாலும் அதற்காக  உயிரையும் கொடுப்பேன்" என்று மேடைக்கு மேடை முழங்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கண்ணுக்கோ... காதுக்கு... இந்த கொடூரம் எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
தர்மத்தில் இரண்டு தர்மம் மிக முக்கியமாக சுட்டிக் காட்டப்படுகிறது. ஒன்று யுத்த தர்மம். இன்னொன்று பத்திரிகை தர்மம். இதில் தொலைக்காட்சி ஊடகங்கள் மிக மிக முக்கிய பங்கு ஆற்றுகின்றன.
ஒரு தமிழச்சிக்கு நடந்த கொடூரத்தின் செய்திகள் அப்படிப்பட்ட தகவல் ஊடகங்களில், கொஞ்சமும் இடம்பெறவில்லை. நடிகர் விஜயகுமாரின் குடும்பச் சண்டையை வெளிச்சம்போட்டுக் காட்ட எல்லா ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன என்று அவர்கள் குற்றம்சாற்றுகிறார்கள்.
அதோடு இதில் ஊடகங்களை மட்டும்  குறை சொல்லக் கூடாது. விஜயகுமார்- வனிதா, வில்லன் நடிகர் - நடிகை, பிரச்சினைகள் என்றால்தான் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது இதை வெளியிடுவதால் என்ன லாபம் என்ற மனப்போக்கு ஊடகத்துறையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அரசியல் தலைவர்களோ அடுத்து வரப்போகும் தேர்தலில் எப்படி ஆட்சிக் கட்டிலில் அமரலாம், அதற்கு யாரோடு கூட்டுச் சேரலாம், துரோகம் செய்து விட்டு போனவர்களை துணைக்கு அழைக்கலாமா... அல்லது கூட இருந்தே குழி பறிப்போர்களை அனுசரித்து போய் ஆட்சியில் அமரலாமா என திட்டம் போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது என சுட்டி காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களால் எப்படி மேடைகளில் தமிழர்களின் நாகரிகத்தைப் பற்றி நாணம் இல்லாமல் முழங்க முடிகிறது என கேள்வி எழுப்புகிறார்கள்.
பிரிட்டனுக்கு போன இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கிருந்த தமிழர்களின் கொந்தளிப்பைப் பார்த்து பின்னங்கால் பிடரியில் பட ஓடி வந்திருக்கிறார். ஆனால், அதே ராஜபக்சேவுக்கு தமிழ்நாட்டில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என ஆதங்கப்படுகிறார்கள்.
இசைப்பிரியா மரணத்தை எப்படி பார்க்கப் போகிறது தாய்த் தமிழகம். என்ன செய்யப் போகிறார்கள் தமிழகத் தலைவர்கள்?
நன்றி  : வ. ம

0 comments: