Thursday 30 September 2010

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,

மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: