Friday 8 October 2010

ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி: இரட்டை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு 2009-ம் ஆண்டின்
இந்திரா காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதினை சோனியா காந்தி யின் கையால் பெறுகிறார் ரஹ்மான்.

ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில், இந்திராகாந்தி தேசிய ஒருமை பாட்டு விருது வழங்கப்படுகிறது.

2009-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் நராயண்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

இந்திரா காந்தி நினைவு தினமான இம்மாதம் 31ம் தேதியன்று விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்துக்கும் விருதுகளை வழங்குகிறார். விருதுடன் ரொக்கப்பரிசு ரூ 2.5 லட்சம் வழங்கப்படும்.

ஏற்கனவே இந்த விருதினை முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம். சங்கர் தயாள் சர்மா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

0 comments: