Wednesday 8 September 2010

106 வயதிலும் கண்ணி கழியாமல்இருக்கும் பெண் அதிசியம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே
இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண்.

இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

இப்படி திருமணம் செய்யாமல், கற்பைப் பறி கொடுக்காமல் வாழ்ந்து வருவதே தனது நீண்ட கால ஆயுளின் ரகசியம் என்று படு தெளிவாகப் பேசுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் இளமைப் பருவத்தில் என்னிடம் யாரும் நெருங்கியதில்லை. நானும் யாரையும் அனுமதித்ததில்லை. ஏன், யாரும் ஒரு முத்தம் கொடுக்கக் கூட நான் அனுமதித்ததில்லை. எனக்கு காதல் தேவை, ரொமான்ஸ் தேவை, செக்ஸ் தேவை என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்த உணர்வும் எனக்கு வந்ததில்லை.

ஒரு ஆணின் துணை எனக்குத் தேவைப்படவில்லை என்கிறார் இஸா.

1904ம் ஆண்டு பிறந்தவர் இஸா. எடின்பர்க் நகரில் வசித்து வருகிறார். தனியார் விஸ்கி தயாரிப்பு நிறுவனத்தில், அதன் உரிமையாளரின் அந்தரங்க காரியதரிசியாக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தினசரி சர்ச்சுக்குப் போவாராம். கோல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். கிறிஸ்தவப் பாடல்களை பாடும் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இஸாதான் அவரது குடும்பத்தில் மூத்தவர்.அவருக்குப் பின்னர் ஆறு தம்பிகளும், தங்கைகளும் பிறந்தனராம்.

எப்போதும் அவர் புன்னகையுடன் காணப்படுவார். சோகமாகவே இருக்க மாட்டார். அவருடைய வயதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர் ஒரு அற்புதமான பெண் என்கிறார் உறவினரான ஷீனா, சிலிர்ப்புடன்.

0 comments: