Sunday, 19 September 2010

அக் - 1ல் எந்திரன் ரிலீஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க வரும் அக்டோபர் 1ம் தேதி
3,000 திரையரங்குகளில் வெளியாகிறது . கிட்டத்தட்ட 2,250க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் , இதில் தமிழகத்தில் மட்டுமே 1,000 பிரிண்டுகள், 1,450 திரையரங்குகள் என பிரமாண்டமாய் வெளியாகிறது எந்திரன். தமிழில் இனியொரு படம் இந்தமாதிரி வெளிவருமா என்பது சந்தேகமே என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தெரிவித்தார். இதில் தமிழகத்தில் மட்டுமே 1,000 பிரிண்டுகள், 1,450 திரையரங்குகள் என பிரமாண்டமாய் வெளியாகிறது எந்திரன்.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா , இங்கிலாந்து , பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, சீனா உட்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் எந்திரன்தான். இத்தனை நாடுகளில் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் திரையிடப்படும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் எந்திரன் பெறுகிறது..."என்று கூறியுள்ளது.


0 comments: