Monday 20 September 2010

கசகஸாவை கொண்டு போன ஒருவர் துபாயில் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாய் வழியாக லண்டன் செல்வதற்காக சென்ற அப்பாவி இந்திய நபரொருவர்
துபாய் போலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவரது கைதுக்கான காரணமாக அரபு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பொருளான கஸகஸா இவரது பையில் இருந்துள்ளமையேயெனத் தொpவிக்கப்பட்டுள்ளது.
நமது ஊர்களில் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் கஸகஸா போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு> பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பிரயாணங்களின் போது இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில வாரங்களாக சிறையில் இருக்கும் இந்த அப்பாவி நபரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.  எனினும் இந்நபர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க அங்குள்ள வக்கீல்களுக்கு இந்திய ரூபாய்ப்படி  12 லட்சத்திற்கு மேல் ஆகுமெனக் கூறப்படுகிறது.
கஸகஸாவைப் போல் அரபு நாடுகளினால் தடைசெய்யப்பட்ட பொருட்களாக சுபாரி  பான் பராக் பான் போன்றவையும் காணப்படுகின்றன.
இந்தக் கவனக்குறைவை மற்றவர்களும் விடாமல் அரபு நாடுகள் வழியே பயணங்களை மேற்கொள்பவர்கள்  தங்களுடைய பொருள்களில் கஸகஸாவோ அல்லது மற்றைய தடைசெய்யப்பட்ட பொருட்களோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

0 comments: