Saturday 18 September 2010

திருப்பதி கோவிலில் பலூன் கேமரா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால்
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரமோற்சவ விழா நடந்து வருவதால் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மேல் பகுதியில் இருந்து ரகசிய கேமரா பொருந்திய ராட்சத பலூன் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 கேமராக்கள் பொருந்திய பலூன் திருப்பதி கோவில் கோபுரத்தின் மேலே பறக்க விடப்பட்டது. இந்த கேமராக்களில் ஒன்று பகலிலும், இன்னொன்று இரவிலும் செயல்படும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இக்கேமராக்கள் துல்லியமாக படம் எடுத்து காட்டும். இதனை கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இதுபற்றி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் போது, பலூனில் உள்ள கேமரா மிகவும் சக்தி வாய்ந்தது. தீவிரவாதிகள் ஊடுரு வலை எளிதில் கண்டுபிடிக்க இது உதவும் என்றார்.

0 comments: