Sunday 29 August 2010

தி.மு.க. மீது விஜயகாந்த் கடும் தாக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் எதிர் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்காது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க. நகரச் செயலர் திருமணம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
நான் தொண்டர்களை தெய்வமாக மதிக்கிறேன். குடும்பத்தில் ஆண் தவறு செய்தால் பெண் விட்டுக் கொடுக்க வேண்டும். பெண் தவறு செய்தால் ஆண் விட்டுக் கொடுக்க வேண்டும்.
எம்ஜிஆருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்தவகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்?
தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். ஆனால் நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார்.
திமுகவிடம் கூட்டணிக்காக என்றைக்காவது தூது விட்டுள்ளேனா? வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் கூட்டணி அமைப்பேன்.
டாக்டர் ராமதாஸின் கூட்டணி வேண்டாமென்றால் அவர் அறிமுகப்படுத்திய மஞ்சள் துண்டை பயன்படுத்துவது ஏன்? கலைஞரின் பொன் விழாவுக்குப் பின்புதான் அவரது மறுபக்கம் எனக்குத் தெரிந்தது.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியுள்ளோம் என்றும், இப்போது விவசாயிகளுக்கு இலவச பம்புசெட் வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மின்சாரமே இல்லை, அதனால்தான் இதைக் கொடுக்கிறார். ஓட்டுக்காக இலவசத் திட்டங்களை அவர் அடுத்தடுத்து அறிவிக்கிறார்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். 10 எம்.எல்.ஏ, 10 எம்.பி.க்களுக்காக கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன்.
ஆட்சியை என்னிடம் கொடுங்கள். நான் நல்ல ஆட்சியைத் தருவேன். அடுத்த தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்காது என்றார்.
நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர்  வெங்கடேசன் சார்பில் விஜயகாந்துக்கு மலர் கிரீடம் சூட்டப்பட்டு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

0 comments: