Monday 16 August 2010

நட்சத்திர கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங் டெங்கு நோய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்த வேளையில் டெங்கு காய்ச்சல் பீடித்துள்ளது.


தம்புள்ளயில் நடைபெற்று வரும் போட்டித் தொடரின் நாளைய போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.


அண்மைக்காலமாக போட்டிகளில் பிரகாசிக்கத் தவறி வரும் யுவராஜ் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடுமென விளையாட்டு விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள போதிலும் உயிர் ஆபத்து எதுவும் கிடையாது என அணித் தலைவர் மஹெந்திர சிங் தோணி தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிராக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மட்டுமே யுவராஜ் சிங் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


யுவராஜ் சிங் மட்டுமன்றி அஷீஸ் நெஹ்ரா, இசாந்த் சர்மா ஆகியோரும் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments: