Saturday 14 August 2010

மயக்க மருந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருட்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ரயில்களில் தேநீர், குளிர்பானம் ஆகியவற்றில் தூக்க மருந்தைக் கலந்து
கொடுத்து பயணிகளிடம் நகை, பணத்தை திருடும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர் என ரயில்வே போலீஸ் ஐஜி கே.சி. மாஹாளி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ந்பயணிகளிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவை தொடர்ந்து திருடப்பட்டது தொடர்பான புகார்கள் வந்தன.

இந்த புகாரிகளின் அடிப்படையில் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பி முத்தமிழன் தலைமையிலான தனிப்படை போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மர்ம நபர்கள் சிலர் பயணிகள் போல ரயில்களில் பயணித்து, அந்த பயணத்தின் போது விநியோகிக்கப்படும் தேநீர், குளிர்பானம் ஆகியவற்றில் தூக்க மாத்திரைகளை ரகசியமாக கலந்துவிட்டிருந்தனர். இதனை அருந்திய பயணிகள் தூங்கும் சமயத்தில், அவர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாகப் புகார்கள் வந்த மும்பை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்ற பயணிகள் விவரம், பாதிக்கப்பட்டவர்கள் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய தீவிர விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.

ரயில்களில் தூக்க மருந்து கொடுத்து திருடுவதில் ஒரு கும்பலாகவே சிலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அது தொடர்பான விசாரணையில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில், கொல்கத்தாவை சேர்ந்த சயீத் ஆசாத் (45), முகமது சஜீத் (22), பசாரத் ஹுசைன் (42), முகமது மசூத் ஆலம் (42) ஆகியோர் சிக்கினர்.

இவர்களை ரயில்வே போலீஸார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்ததில் ரயில்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் உள்ள தொடர்பு உறுதியானது. இவர்களிடம் இருந்து | 70 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டது.

இதேபோல, சென்னையில் இருந்து ஆவடிக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக சங்கர் (எ) நோக்கியா சங்கர் (29), சதீஷ் (எ) சூர்யா (26) ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து | 1.14 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டது.

0 comments: