Friday 13 August 2010

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது ராமதாஸ் காமெடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, ஆலோசனை செய்ய பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.
பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.
திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான 3வது அணி அமைய வாய்ப்புள்ளது என
கருதுகிறேன் என்றார். அந்த அணியில் இடம் பெறுவீர்களா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து ஏன் விலகினீர்கள் என்ற கேள்விக்கு, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார்.

0 comments: