Saturday 14 August 2010

64 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

64 ஆவது சுதந்திர தினம் : தலைவர்கள் வாழ்த்து!


 தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா:

மகிழ்ச்சிகரமான சுதந்திரதினத்தில் அனை வருக்கும் எனது நல்வாழ்த் துக்களையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.


சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தால் நமது நாடு விடுதலை பெற்றதை சுதந்திர தினம் நினைவூட்டுகிறது. சுதந்திரத்தை காப்பது நமது கடமை.

சரித்திர சிறப்புமிக்க இந்த நன்நாளில் ஒற்றுமை, அமைதி, இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அனைவரும் இணைந்து கை கொடுப்போம். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத் துக்கும் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். சுய தேவையை பூர்த்தி செய்யும், முழு நம்பிக்கையுடன் உறுதி யான இந்தியாவை கட்டி எழுப்ப உறுதி ஏற்போம்.
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தியில், அந்நிய ஆட்சியை எதிர்த்து போராடி இன்னுயிர் ஈந்தும், சிறைக்கூடங்களில் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளாகியும் தியாகங்கள் புரிந்த வீரர்களுக்குஇந்நாளில் வீர வணக்கம் செலுத்திடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்ற சுதந்திரத்தின் பயனாக நமது தாய்திருநாடு இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. கல்வி வளர்ச்சியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் உலகநாடுகளுக்கு இணையாக முன்னேற்றம் கண்டுள்ளது. விண்வெளித்துறையும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி பிற நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தியில், அந்நிய ஆட்சியை எதிர்த்து போராடி இன்னுயிர் ஈந்தும், சிறைக்கூடங்களில் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளாகியும் தியாகங்கள் புரிந்த வீரர்களுக்குஇந்நாளில் வீர வணக்கம் செலுத்திடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்ற சுதந்திரத்தின் பயனாக நமது தாய்திருநாடு இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. கல்வி வளர்ச்சியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் உலகநாடுகளுக்கு இணையாக முன்னேற்றம் கண்டுள்ளது. விண்வெளித்துறையும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி பிற நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரத்தின் பயன்கள் தொடர, ஏழை-எளியோர் நலம் பெற, சாதி,சமய வேறுபாடுகளை அகற்றி நல்லிணக்க உணர்வுகளோடு அனைவரும் விரைந்து பாடுபடுவோம் என இத்திருநாளில் உறுதி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:

இந்தியத் திருநாட்டின் முந்தைய வரலாற்றுத் திருப்பு முனை அத்தியாயங்கள் அனைத்துலகிலும் போற்றப்படுபவை. தற்போது சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளம்.

நாட்டிலுள்ள ஏழை எளிய, நடுத்தர, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையோரின் நலன் களை மேம்படுத்த முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பாக செயலாற்றி வரு கிறது. மக்கள் நல அரசின் அம்மகத்தான ஆட்சி நடை பெற்று வரும் இந்நன்னாளில் கொண்டாடப்படும் சுதந்திரத் திருவிழாவான இன்று விடுதலைக்காக உடல், பொருள், உயிர் அனைத்தும் ஈந்த தியாக மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்து வோம். 

விஜய்காந்த்- தேமுதிக தலைவர்

செந்நீரும், கண்ணீரும் சிந்தி பெற்ற சுதந்திரம் இன்றும் வரலாற்றில் மறுக்க முடியாதது, மறைக்க முடியாதது. அத்தகைய சுதந்திரத்தைப் பெற தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள், இந்த சுதந்திர தின திருநாளாகும்.

இன்று சுதந்திர திருநாளை கொண்டாட குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து கொண்டாட வேண்டி இருப்பதும், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், காவலர்களும் பாதுகாப்பு அளிக்கும் நிலையில்தான் ஆட்சித் தலைவர்கள் சுதந்திர திரு நாளை கொண்டாட வேண்டி இருப்பதும் நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கவையாகும்.
ஜி ராமகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விடுதலைக்காக போராடியவர்களின் லட்சியங்கள் உண்மையில் ஈடேறி உள்ளனவா என்பதை மதிப்பிட்டு அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான இலக்குகளை உருவாக்குவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீண்டாமை கொடுமை, மதவெறி, குறுகிய வட்டார குரோதங்கள் என பல நச்சரவங்கள் தலைவிரித்தாடுகின்றன. நாட்டு நலனையும் மக்கள் நலனையும் பாதுகாக்க் முன்னிலும் வீரியமிக்க போராட்டங்கள் எழவேண்டிய காலசூழல் கணிந்துள்ளது. விடுதலை போரில் தனக்கென தனி முத்திரை பதித்த கம்யூனிஸ்ட் இயக்கம் அதே அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களுக்காக போராட இன்று மீண்டும் உறுதி ஏற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

இந்திய திருநாட்டின் 64-ம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மகிழ்ச்சியான இத்தருணத்தில் பொருளாதாரப் பின்னடைவு, தீவிரவாதி களின் அச்சுறுத்தல், மின் உற்பத்தி பாதிப்பு, பண வீக்கம், விலைவாசி உயர்வு என பல்வேறு அச்சுறுத்தல் களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு சவால் களை சந்திக்கவேண்டிய இத் தருணத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒருங்கிணைந்து உழைக்க உறுதி ஏற்போம்.

தேசத்தின் சுதந்திரத்திற் காக பாடுபட்டு தங்கள் இன்னுயிர்களை இழந்த தியாகச்செம்மல்களை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்தியாவின் வருங்காலம் மகிழ்ச்சியாகவும், சுபிட்சமாகவும் விளங்க வேண்டி அனைவரையும் வாழ்த்துகிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்:- இந்திய சுதந்திர தினம்-நம் நாடு அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு, நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்த நாள். நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நடத்திய அறவழி போராட்டத்தை தாக்குபிடிக்க முடியாமல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து, விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம், கணினி தொழில் நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் வியக்கதகு முன்னேற்றம் அடைந்துள்ளது.

உலக நாடுகள் இந்தியா வின் வளர்ச்சியை கண்டு பிரமிக்கின்றன. வல்லரசு நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு படை பலத்திலும் இந்தியா வளர்ந்து வருகின்றது. நமது நாடு மேலும் உயர சுதந்திரத்தை போற்றுவோம்.

கார்த்தி சிதம்பரம் - அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்

இப்பொன்னாள் நாட்டு மக்களுக்கு கிடைத்திட, தங்களது இன்னுயிர் ஈந்த எண்ணற்ற தியாக திருமகன் களுக்கு நமது வீரவணக் கத்தை செலுத்துவோம் உலகையே அச்சுறுத்துகிற பயங்கரவாதம், தீவிரவா தங்களை ஒழித்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த, நவீன இந்தியாவை நாம் உருவாக்கிட ஒவ்வொரு இந்திய இளைஞனும் இந்த நன்னாளில் தேசிய உணர் வோடு நாடு உயர பாடுபடு வோம்.

வசந்தகுமார் - தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் தலைவர்
 

அண்ணல் காந்தியின் அகிம்சை வழியில், அறப்போரில் ஈடுபட்ட தியாக தீபங்கள் ரத்த துளிகளை வியர்வையாக சிந்தி பெற்ற சுதந்திரத்தை இன்றளவும் காத்து வருகிறது காங்கிரஸ் பேரியக்கம். இளைய சமுதா யம் புதிய எழுச்சியோடு ராகுல்காந்தி காட்டிடும் நல் வழியில் தேசவளர்ச்சிக்கு பாடுபட தயாராகிக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்தை பேணிக்காத்திட இந்திய திருநாட்டின் அனைத்து மக்களும் மொழி, ஜாதி, மத பேதமற்ற சமத்துவ சுதந்தி ரத்தை போற்றி மகிழ்வோம்.

0 comments: