Monday 2 August 2010

எந்திரன் ஆடியோ வெளியீடு-பிரகாஷ் ராஜ் சாடல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எனது படத்தின் ஆடியோ விழாவை தமிழகத்தில், தமிழர்கள் மத்தியில்தான் நடத்துவேன். வெளிநாட்டுக்குப் போய் நடத்த மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இதன் மூலம் எந்திரன் படத்தின் ஆடியோ விழாவை தமிழகத்தில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தியதை அவர் போட்டுத் தாக்கியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. பிரமாண்டமான முறையில் இந்த விழாவை நடத்தியுள்ளனர்.

இதை மறைமுகமாக சாடியுள்ளார் பிரகாஷ் ராஜ். அவரது டூயட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இனிது இனிது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு, நண்பர்கள் தினமான இன்று நடந்தது. இதேபோல திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஊர்களிலும் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ்.

சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது வருங்கால மனைவியான போனி வர்மாவுடன் வந்திருந்தார் பிரகாஷ் ராஜ். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் போனி குறித்து கேட்டபோது, இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் இவர்தான் மாஸ்டர். இதற்கு மேல், வேறு எதையும் இப்போது கேட்க வேண்டாம். அதற்கான இடம் இதுவல்ல என்று புன்னகைத்தபடி கூறினார் பிரகாஷ் ராஜ்.

பின்னர் அவர் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டை மறைமுகமாக தாக்கிப் பேசுகையில், பிரம்மாண்டமாக தமிழ் படம் எடுத்துவிட்டு அப்படத்தின் பாடல்களை வெளிநாட்டில் சென்று வெளியிடுகிறார்கள். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் வெளியிடவே விரும்புகிறேன் என்று போட்டுத் தாக்கினார்.

1 comments:

Sweatha Sanjana said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!