Sunday 1 August 2010

சென்னை கடற்கரையில் செக்ஸ். ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை கடற்கரை சாலையில் காருக்குள் பெண் மென்பொருள் ஊழியருடன் லீலையில் ஈடுபட்ட இரு இளைஞர்களிடம்
போலீஸ் போல் நடித்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் பணம் சுருட்டியுள்ளார். போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

0 comments: