Friday 30 July 2010

2 லட்சம் கோடி நகைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸி2 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள்
இருப்பதாக தேவஸ்தானத்திடம் மதிப்பீட்டுக் குழு அறிக்கை அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நகை மற்றும் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடும்படி கோரி, நெல்லூரை சேர்ந்த பெஜவாடா கோபால் ரெட்டி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏழுமலையானின் நகைகள் மற்றும் அசையா சொத்துக்கள் விவரங்களை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கும், தேவஸ்தானத்துக்கும் உத்தரவிட்டது.

அதற்கு தேவஸ்தானம் அளித்த பதிலில், ‘எவ்வளவு தங்க நகைகள் உள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க முடியும், ஆனால், அவற்றில் பதிக்கப்பட்டு உள்ள விலை மதிப்பற்ற பழங்கால கற்களின் மதிப்பை கணக்கிட முடியாது’ என்று தெரிவித்தது. இதையடுத்து, நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து விவரம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கற்களின் மதிப்பு, தரத்தை மதிப்பிடுவதில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் மும்பை, ஜெய்ப்பூரில் இருந்து அழைக்கப்பட்டு, திருமலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் ஏழுமலையானின் நகைகளை மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த குழுவினர் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் என 3 வகையாக தரம் பிரித்து மதிப்பீடு செய்துள்ளனர். அந்த அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர். அதில், ஏழுமலையானுக்கு மொத்தம் 11.5 டன் எடையுள்ள தங்க ஆபரணங்களும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம் என ஸி2 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக கூறியுள்ளனர். இதை தேவஸ்தான அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, இரண்டொரு நாட்களில் அதன் அறிக்கை ஆந்திர அரசிடம்  ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்பிறகு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

உலகின் பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையான். காணிக்கைகள், நன்கொடை என தினமும் லட்சம், கோடி மதிப்புகளில் ஆபரணங்கள் குவிகின்றன. அவருக்கு எவ்வளவு நகைகள் உள்ளன? அவற்றின் மதிப்பு என்ன என்பது இதுவரை மர்மமாகவே இருந்தது. ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம், ஏழுமலையானுக்கு ஸி2 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில், 2 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட ஆபரணங்களின் விவரம் இதோ:

நகை பட்டியல்

மரகத தோரணம்     & 35.271 கிலோ
5 சவரன் சகஸ்ர நாமாவளி தங்க சரடு     & 31.700 கிலோ
1985ல் தேவஸ்தானம் தயாரித்த வைர கிரீடம் & 27.938 கிலோ
தங்க பீதாம்பரம்     & 19.400 கிலோ
தங்க பத்ம பீடம்     & 18.930 கிலோ
4 பட்டை தங்க செயின்     & 10.194 கிலோ
மூலவருக்கு ரத்தினம் பதித்த கிரீடம்     & 10.700 கிலோ
தங்க கிரீடம்     & 9.743 கிலோ
தங்க வைர அஸ்தம்     & 8.129 கிலோ
ஜெம்ஷெட் தங்க அஸ்தம்     & 8.129 கிலோ
நான்கு முக லட்சுமி ஆரம்     & 6.500 கிலோ
வைரம் பதித்த இடைவாள்     & 7.420 கிலோ
தங்க குடம்     & 6.510 கிலோ
சகஸ்ர சாலிகிராம தாமரை செயின்     & 5.735 கிலோ
ஜெம்ஷெட் வைகுண்ட அஸ்தம்     & 5.899 கிலோ
சங்கு கவசம்     & 4,680 கிலோ
சக்கர கவசம்    &4.076 கிலோ
தங்க பாதம்     & 4.190 கிலோ
தங்க சங்கு     & 4.013 கிலோ
தங்க ஒட்டியாணம்     & 4.336 கிலோ
லட்சுமிதேவி ஆரம்     & 4.306 கிலோ
தங்க சூரிய கத்தாரி     & 3.617 கிலோ
அஷ்ட தர தங்ககாசு செயின்     & 3.220 கிலோ
தங்க பாதம்     & 3.190 கிலோ
சாலிகிராம தங்க ஆரம்     & 3.930 கிலோ
தங்க துளசி ஆரம்     & 2.396 கிலோ
லட்சுமி தங்க காசு ஆரம்     & 2.060 கிலோ
ரத்தின தங்க கமல ஆரம்     & 2.333 கிலோ
1 ஜதை தங்க நாகாபரணம்     & 2.263 கிலோ
நாகாபரண பட்டானம்     & 2.821 கிலோ
ரத்தின அஷ்ட கவசம்     & 2.284 கிலோ
வைகுண்ட அஷ்ட நாகாபரணம்     & 2.315 கிலோ
இதுபோல் மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை, வகையான ஆபரணங்கள் உள்ளன.  நன்றி : தினகரன்

0 comments: