Sunday 4 July 2010

டெல்லியில் புதிய விமான நிலையம வீடியோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினுள் மூன்றாவது விமானப் போக்குவரத்து முனையம் (தனி விமான நிலையம்)
அமைக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த முனையம் 37 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தின் 80 சதவீத பகுதிகள், கண்ணாடி மற்றும் மெட்டல்களால் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் மூன்று விமான ஓடுபாதைகளை பயன்படுத்த முடியும்.
லவுஞ்சுகள், ஓட்டல்கள், பார்கள் உட்பட பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் அடுக்குமாடி `பார்க்கிங்' வசதியும் உள்ளது. ஒரு மணி நேரத்தில் 1300 பயணிகளின் சூட்கேஸ் மற்றும் பைகளை கையாளும் வகையில் கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விமான நிலையத்தில் இருந்து 16-ந் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய மன்மோகன்சிங் "பூகோள ரீதியாக, முக்கியமான சர்வதேச விமான போக்குவரத்து பாதையாக இந்தியா உள்ளது. வரும் ஆண்டுகளில், டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு விமான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். மேலும், 2020-ம் ஆண்டுக்குள் இந்திய விமான போக்குவரத்து துறையில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும்'' என்றார். 

0 comments: