Sunday 4 July 2010

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று முதல் ஜுலை 16ஆம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு
வைக்கப்படும். சென்னையில் வரையறுக்கப்பட்ட 909 வாக்குச்சாவடி மையங்கள், 167 தபால் நிலையங்கள், 10 மண்டல அலுவலகங்கள், 1 மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் மண்டல அலுவலகம் உள்பட வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று தங்களது பெயர் குடும்பத்தினர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? அல்லது விடுபட்டுள்ளதா? தவறு ஏதும் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

பெயர், போட்டோ எதுவும் விடுபட்டிருந்தால் அந்தந்த மையங்களில் உள்ள அதிகாரிகளிடம் 6, 7, 8 ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கலாம். 16ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படும் 16ஆம் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

கையொப்பம் இல்லாமல் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. மொத்தமாகவும் மனுக்கள் பெறப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
இதை  ஆன்லைனிலும் பார்க்க http://www.elections.tn.gov.in/  கிளிக் செய்யவும்

0 comments: