Thursday 8 July 2010

பெட்ரோல் விலை ஏற்றத்தால் பொது மக்கள் அவதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தியது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை, லாரி வாடகை உயர்வால் அதிகரித்துள்ளது.
 
டீசல் விலை உயர்ந்த போதிலும் அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அரசு போக்குவரத்து கழகங்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்கின்றன. டீசல் விலை பலமுறை உயர்த்தப்பட்ட போதிலும் அரசு பஸ்களின் கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை.
 
தனியார் ஆபரேட்டர்கள் இயக்கும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாமல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 
இது குறித்து கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி. நடராஜனிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் வருமாறு:-
 
டீசல் விலை உயர்வை சமாளிக்க கட்டணத்தை கூட்டுவது தவிர வேறு வழி இல்லை. எனது நிறுவன பஸ்களுக்கு தினமும் 40 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவு, டயர் விலை உயர்வு, உதிரிபாகங்கள், டிரைவர் சம்பளம் ஆகியவற்றை கணக்கிட்டால் தொழிலே செய்ய முடியாது.
 
குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பும் இனி 3 மாதத்திற்கு வண்டி காலியாகத்தான் ஓடும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் நிரம்புகிறது.
 
இதனால் இத்தொழிலில் பெரிய அளவில் லாபம் எதிர்பார்க்க முடியாது. இதில் அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்படுவதால் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இந்த பாதிப்பு பொதுமக்கள் தலையில்தான் விழுகிறது.
 
தற்போது டீசல் விலை உயர்வால் 350 கிலோ மீட்டர் தூரம் வரை ரூ.10-ம் ஏ.சி.பஸ்களுக்கு ரூ.20 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தவிர கூடுதலாக கட்டணம் வசூலிப்பது இல்லை.
 
இவ்வாறு கே.பி.நடராஜன் கூறினார்.

0 comments: