Saturday 10 July 2010

நித்யானந்தாவின் ஜாமீன் நிபந்தனை தளர்வு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா சாமியாரை
, கடந்த மாதம் 11-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது.

அப்போது, ஆன்மிக போதனை வகுப்புகள் நடத்தக்கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிபந்தனைகளை தளர்த்துமாறு நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுபாஷ் பி.ஆதி நேற்று ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார்.

ஆன்மிக போதனை வகுப்புகளை நடத்த அவர் அனுமதி வழங்கினார். 15 நாட்களுக்கு பதிலாக, 30 நாட்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டால் போதும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, தன்னை கைது செய்தபோது, தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தருமாறு நித்யானந்தா தாக்கல் செய்த மனு, 16-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

0 comments: