Tuesday 6 July 2010

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிகாரிகள் திடீர் விலகல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 37 % சதவீத பங்குகளை சன் குழும அதிபர் கலாநிதி மாறன் வாங்கியதன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானங்களை இயக்கி வரும் முதன்மை நிறுவனம் ஸ்பைஸ்ஜெட். இதன் 38 சதவீத பங்குகளை சன் குழும அதிபரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய உறவினருமான கலாநிதி மாறன் அண்மையில் வாங்கினார். இதைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் அகர்வால் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். அந்த பதவியில் தற்காலிகமாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகிகள் குழுவை சேர்ந்த கிஷோர் குப்தா அமர்த்தப் பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறை துணை தலைவர் அணீஷ் ஸ்ரீ கிருஷ்ணாவும் பதவி விலகி விட்டார். இந்தத் தகவலை ஸ்ரீகிருஷ்ணாவே உறுதி படுத்தியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருவதற்கு என்ன காரணம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.


 

0 comments: