Tuesday 20 July 2010

4 வயது சிறுவன் கொலை கள்ள காதல விபரீதம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாகை மாவட்டம் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்பதால் வெளியூர் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். நாகை புதிய பஸ் நிலையத்திலும் அதிகளவில் மக்கள் வந்து செல்வதால்
பரபரப்பாக காணப்படும். நேற்று மாலையும் வழக்கம் போல பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்தது சிலருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அந்த சூட்கேசில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டு இருக்கலாமோஎன்ற பீதியும் கிளம்பியது. இதனால் அந்த “மர்ம” சூட்கேசை விட்டு விலகி சென்றனர். அந்த சூட்கேஸ் பற்றி போலீசுக்கும் போனில் தகவல் பறந்தது.

நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு மின்னலாக வந்து இறங்கினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயும் வரவவைழக்கப்பட்டது.

அந்த “மர்ம” சூட்கேசை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு இருப்பதற்கான அறிகுறி ஏதுவும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த சூட்கேசை மிகுந்த எச்சரிக் கையுடன் போலீசார் திறந்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த சூட்கேசில் ஒரு சிறுவனின் பிணம் இருந்தது.

வெடிகுண்டு பீதியை கிளப்பிய சூட்கேசில் எதிர் பாராதவிதமாக சிறுவன் பிணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூட்கேசில் பிணமாக கிடந்த சிறுவனுக்கு சுமார் 6 வயது இருக்கலாம். கருநீல டீசர்ட் மற்றும் பூப்போட்ட உள்ளாடை அணிந்து உள்ளான். அவன் அணிந்து இருந்த பேண்ட் அந்த சூட்கேசிலேயே சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவனது முகம் கறுப்புநிற பாலிதீன் பையால் மூடப்பட்டு கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டு காட்சி அளித்தது. அந்தகயிறு சிறுவன் பேண்டில் இருந்த கயிறு போல காட்சிய அளித்தது.இதனால் பெரும் பரபரப்பு  ஏற்ப்பட்டது, மேலும் இன்று பூவரசியை கைது செய்தன அவர் அளித்த வாக்குமூலம் என்னவென்றால்
ஜெயக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா இன்சூரன்ஸ் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பூவரசி (வயது 26) என்பவர் வேலை பார்த்தார். எம்.எஸ்.சி. பட்டதாரியான பூவரசி, கடன் கேட்கும் நபர்களை விசாரித்து, தகுதி இருப்பவர்களை கண்டறிந்து பேசி கடன் வழங்கும் பணியை செய்து வந்தார். அந்த பிரிவில் ஜெயக்குமார் உயர் அதிகாரியாக இருந்தார்.
இதனால் ஜெயக்குமாரும், பூவரசியும் அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டியதிருந்தது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்த பிறகும் ஜெயக்குமாரை பூவரசி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்
பூவரசி வற்புறுத்தலால் ஜெயக்குமாரும், சரி உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்தது. பல இடங்களுக்கு பூவரசியை ஜெயக்குமார் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதனால் பூவரசி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் ஜெயக்குமார், அவரை சமரசம் செய்து கர்ப்பத்தை கலைக்க வைத்துவிட்டார்.
பூவரசி, அடிக்கடி விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு செல்வதுண்டு. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என்ற காரணத்தால் பூவரசி மீது ஜெயக்குமார் மனைவி ஆனந்தி சந்தேகப்படவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூவரசி, ஜெயக்குமாருடனும், அவரது மகள், மகனுடனும் நெருங்கிப் பழகினார்.
ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை அடிக்கடி வெளியில் அழைத்து சென்று வரும் அளவுக்கு அவர் நெருக்கமாகி இருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமாரிடம் பூவரசி, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
பூவரசியின் பேச்சு ஜெயக்குமாருக்கு இம்சை கொடுப்பதாக இருந்தது. எனவே அவர், எனக்கு குழந்தைகள் உள்ளனர். உன்னை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி தட்டிக்கழித்தப்படி இருந்தார்.
திருமணம் ஆகாததால் பூவரசி சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து பணி புரிந்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை ஜெயக்குமாரிடம் பூவரசி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜெயக்குமார், நான் தி.நகர் ஆபீசில்தான் இருக்கிறேன். பள்ளிக்கூடம் லீவு என்பதால் என்னுடன் ஆதித்யாவும் வந்துள்ளான் என்று கூறி உள்ளார்.
உடனே பூவரசி, அப்படியா, சரி உங்களிடம் பேச வேண்டும். நான் தி.நகருக்கு வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜெயக்குமாரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு நான் தங்கி இருக்கும் விடுதியில் விழா ஒன்று நடக்கிறது. சிறுவர்களுக்கு பொம்மை கொடுப்பார்கள். ஆதித்யாவை அழைத்து செல்லட்டுமா? என்று கேட்டார். பூவரசி மீது எந்தவித சந்தேகமும் வராததால் ஜெயக்குமாரும் அவருடன் மகன் ஆதித்யாவை அனுப்பி வைத்தார்.
அன்று மாலை நீண்ட நேரமாகியும் பூவரசியும் ஆதித்யாவும் திரும்பவில்லை. இதனால் பூவரசி செல்போனுக்கு ஜெயக்குமார் தொடர்பு கொண்டார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஜெயக்குமார் வேப்பேரி விடுதிக்கு வந்து விசாரித்தார். அங்கு பூவரசியைக் காணவில்லை. அவரது அறை பூட்டப்பட்டு கிடந்தது.
விடுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, பூவரசி ஒரு ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து ஆதித்யா கதி என்ன ஆயிற்று என்ற பதற்றம் ஜெயக்குமாரிடம், அதிகரித்தது. அவர் பதறியடித்தப்படி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு பூவரசி படுக்கையில் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது? என்று ஜெயக்குமார் விசாரித்தபோது, நானும் ஆதித்யாவும் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அந்தோணியார் கோவில் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தோம். நான் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டேன். என்னை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆதித்யா என்ன ஆனான் என தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார்.
இது ஜெயக்குமாருக்கு, கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆதித்யாவை மர்ம மனிதர்கள் யாராவது கடத்திச்சென்று இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டார். இது பற்றி எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமாரும், பூவரசியும் புகார் செய்தனர்.
எஸ்பிளனேடு போலீசார் 17-ந் தேதி இரவு விசார ணையை தொடங்கினார்கள். பூவரசியிடம் விசாரணை நடத்திய பிறகு இரவு 11 மணிக்கு விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்த நிலையில் மறுநாள் (18-ந்தேதி) நாகை பஸ் நிலையத்தில் ஒரு சிறுவனை யாரோ கொலை செய்து, சூட்கேசில் பிணத்தை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
கேட்பாரற்று கிடந்த அந்த சூட்கேசில் துணியால் அந்த சிறுவன் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் நீலநிற டி- சர்ட்டும், நீலம் மற்றும் வெள்ளை கலர்களில் பேண்டும், நீலக்கலரில் பூப்போட்ட உள்ளாடையும் அணிந்திருந்தது தெரியவந்தது. இந்த தகவலை நேற்று காலை தினத்தந்தியில் பார்த்த போலீசார் அது, ஆதித்யாவாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் மனைவி ஆனந்தியை நாகை அழைத்து சென்றனர். நாகை பஸ் நிலையத்தில் சூட்கேசில் இருந்த சிறுவனின் உடல் நாகை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவன் உடலை பார்த்த மறுவினாடியே, அய்யோ இது மகன்தான் என்று ஆனந்தி கதறித் துடித்தார்.
ஆசை, ஆசையாக வளர்த்த செல்ல மகன், கொடூரமாக கொல்லப்பட்டு, பிணக்கோலத்தில் கிடப்பதை கண்டு தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஆனந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடுமையான சோகம் காரணமாக ஆனந்தியால் நிதானமாக போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க இயலவில்லை.
சிறுவன் ஆதித்யா மிக, மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தான். அவனது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன. நாடா கயிற்றால் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான்.
அதன் பிறகும் அவன் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக அவன் முகம் பாலிதீன் கவரினால் மூடி கட்டப்பட்டிருந்தது. அவனை, யார், எதற்காக கடத்தி கொலை செய்தனர்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
ஆதித்யாவை அழைத்து சென்ற பூவரசி மீது போலீசாருக்கு தொடக்கத்தில் இருந்தே சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசவுந்தரி விசாரணையை தீவிரப்படுத்தினார். நேற்று முழுக்க அவர் விசாரிக்கப்பட்டார்.
அப்போது சில கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக உளறியபடி பதில் அளித்தார். ஆதித்யாவை வெளியில் அழைத்து சென்றது ஏன் என்ற கேள்விக்கு அவர் 2 விதமான பதில் சொன்னார்.
விடுதியில் நடக்கும் விழாவுக்காக ஆதித்யாவை அழைத்து செல்வதாக கூறிய பூவரசி, போலீசாரிடம் கூறுகையில், பாரிமுனை அந்தோணியார் கோவில் விழாவுக்கு அழைத்து சென்றேன் என்றார். இந்த பதில்தான் பூவரசி மீது போலீசாருக்கு முதன் முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாரிடம் அவர், பாரிமுனையில் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாய் என்று கேட்டனர். அதற்கு பூவரசி, நான் மயங்கி விழும் முன்பு அரண்மனைக்காரன்தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இன்சூரன்ஸ் கடன் வாங்க விண்ணப்பித்திருந்த ஒருவர் எதிர்திசையில் தெருவின் அடுத்த பக்கத்தில் வந்து கொண்டிருந்தார். நான் ஆதித்யாவை தெருவின் ஒரு பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு, அவரிடம் போய் பேசி விட்டு வந்தேன். திரும்பி வந்தபோது ஆதித்யாவை காணவில்லை என்றார்.
பூவரசியின் பதில்கள் மீண்டும் முரண்பாடுகளாக இருந்ததால், ஆதித்யாவை அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். ஆனால் நேற்றிரவு வரை பூவரசி ஆதித்யாவை யாரோ கடத்தி சென்று கொன்றிருக்கிறார்கள் என்று கூறியபடி இருந்தார். இதையடுத்து போலீசார் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பிறகு ஆதித்யாவை கொலை செய்ததை பூவரசி ஒத்துக்கொண்டார். ஜெயக்குமாருக்கும், பூவரசிக்கும் இடையே இருந்து வந்த கள்ள உறவே ஆதித்யா உயிர் பறிக்கப்பட காரணமாகி விட்டது. ஜெயக்குமாரை திருமணம் செய்து சொந்தம் ஆக்கிக்கொள்ள ஆதித்யா இடையூறாக இருக்கக் கூடாது என்ற வெறியால் பூவரசி ஈவு, இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளார்.
பூவரசி இன்று முறையப்படி கைது செய்யப்பட்டார். ஆதித்யாவை கொலை செய்தது எப்படி என்பதை அவர் போலீசாரிடம் விளக்கமாக கூறினார். வாக்குமூலமும் கொடுத்தார்.
இதையடுத்து அவரை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிறுவன் ஆதித்யா முகத்தை சுவரில் மோத செய்து, பூவரசி கொன்றுள்ளார். அந்த இடத்தையும் போலீசார் பார்வையிட்டு தடயங்களை பதிவு செய்தனர்
அடுத்தக்கட்டமாக போலீசார் இன்றே பூவரசியை நாகை அழைத்து செல்கிறார்கள். அங்கு ஆதித்யா உடல் வீசப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணையை நாகை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்காக பூவரசியை சென்னை போலீசார், நாகை போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது.
நன்றி : மாலைமலர்



0 comments: