Friday 23 July 2010

ரூபாய் 1500 க்கு இனி லேப்டாப விற்பனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடில்லி: ஐஐடி மெட்ராஸ், கான்பூர், கோரக்பூர் மற்றும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் மாணவர்கள் இணைந்து, ரூ.1500க்கு
புதிய லேப்டாப்பை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
புதிய லேப்டாப்பை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில சிபல், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி பேசினார். அதில் அவர், ஐஐடி மாணவர்களின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றும், முழுவதும் கல்வி பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,தெரிவித்தார்.
டச் ஸ்கிரீன், பில்ட் இன் கீ போர்டு, 2 ஜிபி ராம் மெமரி, வை-பை கனெக்டிவிட்டி, யுஎஸ்பி போர்ட், வீடியோ கான்பெரன்சிங் வசதி, மல்டிமீடியா, பிடிஎப் ரீடர், அன்ஜிப் டூல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த மலிவு விலை லேப்டாப கொண்டுள்ளதாகவும், 2 வாட் மின்சாரத்தில் இந்த லேப்டாப் இயங்கக் கூடியதான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய லேப்டாப், 2011ம் ஆண்டுவாக்கில் விற்பனைக்கு வர இருப்பதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், இன்னும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக, அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் திட்டமிட்டப்படி மலிவு விலை கம்ப்யூட்டர் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2011) முதல் கம்ப்யூட்டர்கள் வழங்கும் பணி தொடங்கும். மத்திய அரசின் நீண்ட நாள் முயற்சி தற்போது செயல்வடிவம் பெறத் தொடங்கி உள்ளது.
மத்திய மனித ஆற்றல் துறை உதவியுடன் மலிவு விலை கம்ப்யூட்டர் வடி வமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மலிவு விலை கம்ப்யூட்டரை அதிக அளவில் தயாரித்தால் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.
500 ரூபாய்க்குக் கூட கம்ப்யூட்டரை மிக மலிவாக மத்திய அரசால் வழங்க முடியும். அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மலிவு விலை கம்ப்யூட்டரில் வீடியோ, வெப்கான்பரன்ஸ், மல்டி மீடியா, இணையதள வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
மாணவ- மாணவிகளுக்கு இந்த மலிவு விலை கம்ப்யூட்டர் மிக, மிக பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.

0 comments: