Saturday 24 July 2010

பிலிப்பென்ஸை உலுக்கிய பூகம்பம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் செய்திப்படி சனிக்கிழமை கலை தென் பிலிப்பைன்ஸ் பகுதியை
7.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் உலுக்கியது.

இந்த பூகம்பத்தில் உயிர்ச் சேதம் பற்றியோ காயமடைந்தவர்கள் பற்றியோ கட்டடங்கள் பற்றியோ இதுவரை எந்த விவரமும் கூறப்படவில்லை. ஹவாயில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை மையம் தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

தென் பிலிப்பைன்ஸில் உள்ளா மிண்டானோ தீவு அருகே மோரே வளைகுடாவை நேற்றுக்காலை 7.15மணிக்கு பூகம்பம் தாக்கியது. மோரோ வளைகுடா கடலின் ஆறு மைல் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. தென் பகுதியில் உள்ள கோட்டா பட்டோ  நகருக்கு 121 கிலோ மீட்டர் த்துரத்தில் இந்த பூகம்பம் நிகழ்ந்துள்ளது. மணிலா நகருக்கும் இந்தப் பூகம்பம் நடந்த இடத்திற்கும் உள்ள தூரம் 910 கிலோ மீட்டர் ஆகும்.

0 comments: