Friday 25 June 2010

போதை பொருளுடன் சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதை பவுடர், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் கும்பல்தலைவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் கேட்டமின் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மலேசியா செல்லும் பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது இளையான் குடியைச் சேர்ந்த முகமது தனுஷார் என்பவர் மலே சியா செல்ல விமானத்துக்காக காத்து இருந்தார். அவரிடம் சோதனை போட்ட போது 5 பால் குக்கர்களில் 14 1/2 கிலோ “கேட்ட மின்” என்ற கொடிய போதைப்பொருள் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.1 1/2 கோடி ஆகும். அவரிடம் அதிகாரிகள் எப்படி கிடைத்தது? என்று விசாரித்தபோது “தனக்கு எதுவும் தெரியாது, மலேசியாவுக்கு சாமான்கள் கொண்டு செல்ல டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்தனர். என்னை அனுப்பியவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்” என்றார்.

முகமது சன்சூர் கார்க் கூறுகையில், “இளையான்குடியில் வேலை இல்லாமல்அவதிப்பட்டேன், அப்போது சரவணன் வந்து, எனக்கு தெரிந்த தொழிலதிபர்சென்னையில் இருக்கிறார்; பாஸ்போர்ட்டுடன் வா என்று அழைத்து வந்துகண்ணப்பனை அறிமுகப்படுத்தினார். அவர்ஒரு பார்சலை தருகிறோம்; வெளிநாட்டில் கொடுத்துவிட்டு வந்தால் ரூ.5 ஆயிரம் தருவோம்என்றுகூறினார். பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதை வாங்கினேன்என்றார்.

இதையடுத்து அவரை வழியனுப்ப வந்த சென்னையைச் சேர்ந்த கண்ணப்பன் (54), சரவணன் (35) ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். முகமது தனுஷாரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களுக்கு “கேட்டமின்” போதை பொருள் எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார்? என்பது குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: