இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கையில் பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது என்று தடை உள்ளது. இருப்பினும் இதை யாரும் மதிப்பதில்லை. இந்த நிலையில், அதிரடி நடவடிக்கையாக முத்தமிடுவோரைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
கொழும்பில் தடையை மீறி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்ட 200க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீஸார் கைது செய்தனர்.
மாத்தரை, குருநாகல் ஆகிய பகுதிகளில் போலீஸார் முத்தமிடுவோரைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கினர்.
பூங்கா மற்றும் பஸ் நிலையங்களில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை கைது செய்தனர். மொத்தம் 200 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ- மாணவிகள்.
இவர்களில் சிலருக்கு 15 வயதுக்கும் குறைவாகும். அவர்களை பெற்றோர்களை வரவழைத்து போலீஸார் ஒப்படைத்தனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்
Saturday, 12 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அடக்கொடுமையே....
Post a Comment