Friday 4 June 2010

குடுமி பிடி சண்டை பிரச்சினை ஓய்ந்தது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி மேல்- சபை தேர்தல் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியன், ஈரோடு கே.வி. ராமலிங்கம் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக சுதர்சன நாச்சியப்பன் போட்டியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
இவர் ஏற்கனவே மேல்- சபை எம்.பி.யாக இருக்கிறார். அவருக்கு மீண்டும் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இவரது சொந்த ஊர் சிவகங்கை. அதே தொகுதியில் 1999-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்து முதல் தடவையாக வென்றார்.
பிறகு இரண்டாவது முறையாக 2004-ல் மேல்- சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மூன்றாவது முறையாக எம்.பி.யாகிறார்.
சுதர்சன நாச்சியப்பன் எம்.ஏ.பி.எல். படித்தவர். சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியுள்ளார். இவருக்கு ஸ்ரீமதி தங்கம் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர், இதனால் காங்கிரஸ் கட்சியில் குடுமி பிடி சண்டை திர்த்து வைக்கப்பட்டது .

0 comments: