Sunday 6 June 2010

ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : தொல்.திருமாவளவன் அறிவிப்பு . சென்னை : டெல்லிக்கு வருகைதர உள்ள ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்திப் படுகொலை செய்த ராஜபக்ஷே, இந்தியாவிற்கு வருவதை தமது கட்சி எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்திற்குள் முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்படுவர் என்று இந்திய அரசிடம் வாக்குறுதி அளித்ததை இதுவரை ராஜபக்ஷே நிறைவேற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள், அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக அலைந்து திரியும் சோகநிலை தொடர்ந்து வருவதாக திருமாவளவன் கூறியுள்ளார் . இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர், அன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும்
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமைக்குச் சொந்தக்காரர் ராஜபக்சே தமிழினத்தையும், மனித நேயத்தையும் ஒன்று சேர்த்து மண்ணைத் தோண்டிப்புதைத்த மாபாதகர்.
மத்திய அரசு ராஜபக்சேவுக்கு விரிக்க நினைக்கிறது ரத்தினக் கம்பளம். இந்தச் செயல் 6 1/2 கோடி தமிழர்களையும் அவமானப்படுத்தும் அவலம். மத்திய அரசின் இந்த அணுகு முறை தமிழர்களின் உள்ளத்தை யும் உணர்வையும் நோகடிக் கின்றது. இப்படிப்பட்ட இந்தச் செயலை லட்சிய தி.மு.க.வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டன மும் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

0 comments: